Tamilnadu
”பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு பணியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு”.. டி.ஆர்.பாலு MP அனல் பேச்சு!
அமலாக்கத்துறையை ஏவி விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை அராஜக முறையில் கைது செய்துள்ள பா.ஜ.கவின் ஜனநாயக விரோத மக்கள் விரோத பழிவாங்கும் எதேச்சதிராக நடவடிக்கைகளைக் கண்டித்து கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கே.எம்.காதர்மொகிதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கண்டன உரையாற்றிய தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, "அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைகையை தங்கள் குடும்பத்தின் இழப்பாகக் கருதி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இங்குக் கூடி முதலமைச்சருடன் கைகோர்த்து நிற்கிறார்கள்.
18 மணி நேரம் சோதனை என்ற பெயரில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கொடுமைப் படுத்தியுள்ளது. அனுப்பாத சம்மனுக்குக் கையெழுத்துப் போடச் சொல்லி மிரட்டியுள்ளனர். இதுபற்றி கேட்டபோது அவர் தாக்கப்பட்டுள்ளார்.
அவர் நெஞ்சுவலியால் துடித்தபோதும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர். உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையில் கூட அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்கிறது பா.ஜ.க ஏவிவிட்ட அமலாக்கத்துறை.
பா.ஜ.க ஆட்சி இன்னும் 6 மாதமோ ஒரு வருடமோதான் இருக்கிறது. அதன்பிறகு இதற்கு எல்லாம் பா.ஜ.க பதில் சொல்லியே ஆகவேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் நடவடிக்கை எடுக்காமல் இப்போது வந்து கைது செய்து, வேண்டும் என்றே நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர்.
பா.ஜ.கவின் மிரட்டலுக்கு எல்லாம் பணியாத ஒரு மாநிலம் தமிழ்நாடு தான். அதுவும் தி.மு.க தலைமையிலான அரசு. நெருப்பு ஆற்றில் பயணிப்பவர் நமது தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அண்ணாமலைக்கு நீங்கள் வைத்த பெயர்தான் ஆட்டுக்குட்டி அண்ணாமலை இப்பதான் அவரை நீதிமன்றம் வரவைத்திருக்கிறன. கொங்கு மண்டலத்தில் 11 பாராளுமன்ற தொகுதி உள்ளது. இந்த 11 இடத்திலும் தி.மு.கவை வெற்றி பெறவைக்கும் திறமை செந்தில் பாலாஜிக்கு உண்டு. அதனால்தான் அவர் குறிவைக்கப்பட்டுள்ளார்.பா.ஜ.கவின் பகல் கனவு தமிழ்நாட்டில் பலிக்காது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!