Tamilnadu
100க்கும் அதிகமான பெண்கள்,ஆபாச படங்கள்: தமிழகத்தை உலுக்கிய நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த தங்கபாண்டியனின் மகன்தான் காசி (29). இவர் மீது, கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த இளம்பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர், காசி கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில், வசதியான இளம்பெண்களை குறிவைத்து அவர்களுடன் நட்பாக பழகி, பின்னர் காதலித்து ஏமாற்றியுள்ளார். மேலும் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் என எடுத்து வைத்துக்கொண்டு சில நாட்கள் கழித்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இதில் சில பெண்களை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளது தெரியவந்தது.
இப்படி தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் இளம்பெண்கள் மட்டுமின்றி பள்ளி சிறுமிகளை காசி விடவில்லை. இதையடுத்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட 6 வழக்குகள் பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து காசியின் நண்பர்களான தினேஷ் கௌதம், டேசன் ஜினோ ஆகியோரும் கைது செய்யப்பட்டதோடு, இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்த காரணத்தாலும், சாட்சியங்களை கலைக்க முயன்ற காரணத்தாலும் காசியின் தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டிற்கு பின் பிணையில் வெளிவந்தார். தொடர்ந்து இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட காசி, குற்றாவளி என நிரூபணம் ஆனதால், அவருக்கு இந்திய தண்டனை சட்டம் ஐபிசி 376(2) என் பிரிவின் கீழ் சாகும்வரை ஆயுள் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?