Tamilnadu
பைக் மீது மோதிய லாரி.. கணவன் கண் முன்னே 3 மாத கர்ப்பிணி மனைவிக்கு நடந்த துயரம்: சோகத்தில் குடும்பம்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது கணவர் அஜித். இந்நிலையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் இரும்பு கழிவுகளைச் சேகரிப்பதற்காக பட்டமந்திரி பகுதிக்குச் சென்றுள்ளார்.
பின்னர் இருவரும் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். மீஞ்சூர் அருகே வந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், ஐஸ்வர்யா லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் கணவர் அஜித்திற்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் உயிரிழந்த ஜஸ்வர்யா உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மூன்று மாத கர்ப்பிணி மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!