Tamilnadu
”தமிழ்நாட்டி அனைத்து திட்டங்களுக்கும் விதை போட்டவர் கலைஞர்தான்” : ஈஸ்வரன் புகழாரம்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறையும், 13 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 13 முறை வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்து நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா ஒரு வருடத்திற்குக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது.
அதன் ஒருபகுதியாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவினை ஜூன் 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.க தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாட்டு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக “அப்பா என்று அழைக்கக்கட்டுமா தலைவரே” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட நூலைக் கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய கொங்கு நாட்டு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், "திசை எட்டும் ஒலிக்கின்ற பெயர் கலைஞர். புரட்சிகரமான தமிழ் பெயர் முத்தமிழறிஞர் கலைஞர். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து திட்டங்களுக்கும் விதை போட்டவர் கலைஞர்தான். தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தலைவர் கலைஞர் போட்டுக்கொடுத்த விதைதான் ஆட்சி செய்யும்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!