Tamilnadu
“அண்ணாமலைக்கு நெருக்கம்.. ஆளுநருடன் புகைப்படம் எடுத்த ரவுடி?” : மோசடி புகாரில் பாஜக மாநில நிர்வாகி கைது!
தமிழ்நாடு பா.ஜ.கவில் இணைந்து உடனே தலைவர் பொறுப்புக்கு அண்ணாமலை மாற்றப்பட்ட பிறகு, தமிழ்நாட்டு பா.ஜ.கவையே மேலும் அதளாதளத்திற்குள் கொண்டுச் சென்றதே அண்ணாமலை சாதனை என சொந்தக் கட்சிகாரர்களே விமர்சிக்கும் வகையில் அவரது செயல்பாடு உள்ளது.
விவரம் தெரியாமல் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட பா.ஜ.க தலைவர்களுக்கு மத்தியில், தான் சொல்வது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என தெரிந்தே உருட்டுவதில் அண்ணாமலை எப்போதுமே தனி ரகம் தான்.
அதுமட்டுமல்லாது, அடுத்தடுத்து ஆபாச வீடியோ, ஆடியோ மற்றும் பாலியல் சர்ச்சை புகார்கள் பாஜக மீது குவிந்துள்ளது. இது ஒருபுறம் என்றால் சொந்தக் கட்சிக்காரர்களிடமே மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவமும் தமிழக பாஜகவில் சர்வசாதரணமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அந்தவகையில் சென்னையில் மோசடி புகார் தொடர்பாக பாஜக நெசவாளர் அணியின் மாநில செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர், நெசவாளர் அணியின் மாநில செயலாளர் மின் ரமேஷ் என்பவர் தன்னிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறி புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் கொரட்டூர் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மோசடி தொடர்பான வழக்கு பாஜக தமிழ்நாடு நெசவாளர் அணியின் மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் என்பவரை கோட்டூர்புரம் போலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி மின்ட் ரமேஷ் என்பவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது வடசென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!