Tamilnadu
12 Result போல் அனைத்து பல்கலைக்கழக தேர்வு முடிவுகளும் ஒரேநாளில் வெளியிட நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி!
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுடன் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி "2023-24 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, பாடத்திட்டம் மாற்றியமைப்பு, பல்கலைக்கழகங்களில் கட்டண நிர்ணயம், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தும் நிலை, கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு ஆயத்தமாவது, மாநில கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடம் 4 பருவத் தேர்வுகளிலும் கட்டாயம் பின்பற்றப்படும் என்றும் இதற்காக தமிழ் பாடத்திற்கு ஒரு குழுவும், ஆங்கில பாடத்திற்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாடத்திட்டத்தை தயார் செய்து அளிப்பார்கள். இந்த ஆண்டு முதல் அனைத்து கல்லூரிகளிலும் இரண்டு வருடத்திற்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடம் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும் .
நான் முதல்வன் திட்டம் மூலம் 6,986 பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி உள்ளனர். சிங்கப்பரில் கூட நான் முதல்வன் திட்டத்தை சிறப்பாக வரவேற்று உள்ளனர்.
தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பகளில் தேர்வுகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெவ்வேறு தேதிகளில் அறிவிக்கப்படுகிறது. அதை மாற்றி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்படி ஒரேநேரத்தில் வெளியாகிறதோ அதுபோல் அனைத்து பல்கலைக்கழக தேர்வு முடிவுகளும் வெளியாக வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்தால், அவர்கள் செலுத்திய கட்டணத்தை கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும் என துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!