Tamilnadu
அன்புள்ள அம்மா அம்மா.. தாய் இறந்த சோகத்தில் விபரீத முடிவெடுத்த பாச மகன்: சோகத்தில் குடும்பம்!
சென்னை அடுத்து புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். அவரது மனைவி நாகேஸ்வரி. இந்த தம்பதிக்கு நவீன், விவேக் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மகன்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் செய்யது வைக்க வேண்டும் என கணவனிடம் நாகேஸ்வரி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
அதேபோல் நேற்று கணவன் மனைவி இருவருக்குள்ளும் மகன்கள் திருமணம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென நாகேஸ்வரி தீ வைத்துக் கொளித்திக்கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தாயின் இறுதி சடங்கு முடிந்த பிறகு இருசக்கர வாகனத்தில் காசிமேடு பகுதிக்கு சென்ற மகன் விவேக், அங்கு வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்தும் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரேநாளில் தாய் மகன் இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!