Tamilnadu
இருசக்கர வாகனங்களை திருடி OLX இணையத்தில் விற்று வந்த கும்பல்: போலிஸாரிடம் சிக்க வைத்த CCTV காட்சிகள்!
சென்னையில் அதிகாலையில் இருசக்கர வாகனங்கள் திருடுபோவது குறித்து போலிஸாருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மேலும் வாகனங்கள் திருடுபோன இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஏற்கனவே வாகன திருட்டு வழக்கில் சிக்கிய வேலூரைச் சேர்ந்த மெக்கானிக் வெங்கடேஷ் மற்றும் விஷ்ணுவர்தன், ரதீஷ்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், திருடப்படும் வாகனங்களை OLX போன்ற இணையத்தில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதற்காக பழைய வாகனங்களை வாங்கி அதன் ஆவணத்தைப் போலியாகத் தயாரித்துத் திருடப்பட்ட வாகனங்களில் இணைத்து விற்பனை செய்துள்ளனர். அதோடு வாகனத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் சேசிங் என்னையும் அழித்து, திருட்டு வாகனத்தில் புதிய சேச்சிங் எண்ணை பதிவு செய்தது விற்பனை செய்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்த 12 இருசக்கர வாகனங்களை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கும்பல் யமஹா மற்றும் ஸ்ப்ளெண்டர் போன்ற நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பழைய மாடல் இரு சக்கர வாகனங்களையே குறிவைத்துத் திருடிவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!