Tamilnadu
நேற்று மிட்சுபிஷி.. நாளை ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தி.மு.க அரசு மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் நேற்று மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1891 கோடி முதலீடுகளை ஈர்க்கும் கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 2000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக இதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தன்னுடைய அடுத்த கட்ட மெகா முதலீட்டை அறிவிக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.15000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் நிறுவனம் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
Also Read
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!
-
“கரூர் துயரத்தில் பொய்த் தகவல்களை கூறும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
“பொதுமக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
🔴LIVE | கரூர் துயரம் - பேரவையில் காரசார விவாதம்... பழனிசாமியை கேள்விகளால் துளைத்தெடுத்த அமைச்சர்கள்!