Tamilnadu
”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பா.ஜ.கவால் எதுவும் செய்ய முடியாது”.. தயாநிதி மாறன் MP பேச்சு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தி.மு.க சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாகச் சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் தெற்கு பகுதி தி.மு.க சார்பில் வெப்பேரியில் திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திரு.வி.க.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் பேசிய தயாநிதி மாறன் எம்.பி, "இந்தியாவில் பிற மாநிலங்களுக்குக் கிடைக்காத பெருமை நமது தளபதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பின்னர் தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளது. அதன் காரணமாகவே இந்தியாவின் தலை சிறந்த முதலமைச்சாராக நமது முதலமைச்சரை இந்தியாடுடே பத்திரிக்கை தேர்வு செய்து வெளியிட்டது
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உட்பட பல்வேறு திட்டங்களை நமது முதலமைச்சர்தான் கொண்டுவந்தார். செப்டம்பர் 15 குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்க உள்ளோம். அதேபோல் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1000 வழங்குவதும் நமது ஆட்சிதான்.
தொலைக்காட்சி முதல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வரை தி.மு.க ஆட்சியில் இலவசமாக கொடுத்துத்தான் தி.மு.க முன்னேறாமல் உள்ளது என்று பிரதமர் கூறுகிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம் என்று கூறினார்கள். ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிறது. இருந்தும் இருந்தும் இந்தியாவில் ஒரு நதிகள் கூட இணைக்கப்படவில்லை.பா.ஜ.க-வை பொறுத்தவரையில் தேர்தலுக்குத் தேர்தல் தங்களது நிலையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதற்குப் பதில் ஆர்.எஸ்.எஸ் ரவி என்ற பெயர்தான் அவருக்கு பொருத்தமாக இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் போல் செய்தியாளர்களைச் சந்தித்து திராவிடம் விழுந்துவிட்டது என்றும் சட்டம் சீர் கெட்டு விட்டது என்று கூறுகிறார். ஆனால் பா.ஜ.க ஆட்சி செய்யும் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. முதலில் பிரதமரை அதை அணைக்கச் சொல்லுங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிற தமிழ்நாட்டு மண்ணில் பா.ஜ.க-வால் ஒரு போதும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் பா.ஜ.கவால் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!