Tamilnadu
மக்களே உஷார்.. சார்ஜ் போட்டபடியே செல்போனில் பேசிய வாலிபருக்கு நடந்த துயரம்!
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் அதேபகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மெரினா கடற்கரைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் இரவு தனது அறைக்குத் திரும்பியுள்ளார். அப்போது அவரது செல்போனில் சார்ஜ் இல்லாததால், சார்ஜ் போட்டுள்ளார். இதையடுத்து சார்ஜ் போட்ட படியே தனது நண்பரைத் தொடர்பு கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென செல்போனில் மின்சாரம் பாய்ந்துள்ளது. உடனே அவர் அலறிக்கொண்டே கீழே விழுந்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டினர் காமராஜ் மயங்கி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு போலிஸார் வந்து பார்த்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை மீட்டு போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சார்ஜ் போட்டபடியே செல்போனில் பேசிய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தூக்கில் தொங்கிய படி.. காதல் ஜோடி சடலங்கள் மீட்பு.. ஆணவக் கொ*லையா?” - மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்!
-
“ஏ.டி.எம் கார்டு மூலம் மாத்திரைப் பொடி.. கில்லி சரத்-ஐ என்ன செய்யப்போகிறார் யோக்கியர் விஜய்” - முரசொலி!
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!