Tamilnadu
+2 பொதுத்தேர்வு.. 94% மாணவர்கள் தேர்ச்சி.. முதல் மூன்று இடத்தை பிடித்த மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா ?
ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 12-ம் வகுப்புக்கான இந்த 2022 - 2023 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் மாணவர்கள் தங்களது உயர் கல்வி குறித்துப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி சில மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனிடையே 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற்றதால், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீட்டுத் தேதி மே 8-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38% (4,05,753), மாணவர்கள் 91.45% (3,49,697) பேர் அடங்குவர். தமிழ்நாட்டில் மொத்தம் 94% பேர் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
அதே போல் 2022 - 2023 கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் 97.05% மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் 96.61% தேர்ச்சி பெற்று 2-ம் இடத்தையு,ம் பெரம்பலூர் மாவட்டம் 95.96 % தேர்ச்சி பெற்று 3-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!