Tamilnadu
கரப்ஷன், கமிஷன்.. அ.தி.மு.க ஆட்சி ஊழலை அம்பலப்படுத்திய CAG REPORT : புட்டுபுட்டு வைத்த அமைச்சர் மா.சு!
அ.தி.மு.க ஆட்சியின்போது பல்வேறு துறையில் நடந்துள்ள முறைகேடுகள் சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "குட்கா பான்பராக் போன்ற புகையிலை தொடர்பான போதை வஸ்துக்களால் இளைஞர்களுடைய வாழ்க்கை மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாக்குவதை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கினை தொடர்ந்தார்.
உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் வாதத்தினை ஏற்றுச் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடையை விதித்து உத்தரவு வழங்கி இருக்கிறது. இந்த உத்தரவின் மூலம் குட்கா பன்பராக் போன்ற மேல்லும் புகையிலை பொருட்களின் மீதான தடை நீடிக்கிறது. இதையும் மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் எப்படி எல்லாம் தலைவிரித்தாடியிருக்கிறது என்பதை சிஏஜி அறிக்கை உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெளிவாக்கியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் வைத்துள்ள துறைகளில் நடைபெற்ற முறைகேடுகளை இவ்வறிக்கை தெளிவாக விளக்கி உள்ளது. அதிமுக ஆட்சியில் ஊழல் எவ்வாறு எல்லாம் ஊக்கப்பட்டுள்ளது என்பதை இவ்வறிக்கை தெளிவாக விளக்கி உள்ளது.
நெடுஞ்சாலைத் துறையில் 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் 907 ஒப்பந்தங்களில் 490 ஒப்பந்தங்கள் ஒரே ஐ.பி முகவரியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடியின் உறவினர்களுக்கு ஒரே ஐ.பி முகவரியில் டெண்டர்கள் வழங்கப்பட்டு அதில் முறையீடுகள் நடைபெற்று உள்ளது.
கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் என்ற கொள்கையை மட்டுமே பின்பற்றி அ.தி.மு.க ஆட்சி செயல்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் தகுதியான பயணிகளுக்கு வீடு வழங்காமல் தகுதியற்ற பயனாளிகளுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாகத் திறமையற்ற செயல் மற்றும் தலைவிரித்தாடிய ஊழல் ஆகியவற்றால் லட்சக்கணக்கான ஏழை மக்களின் வீடு கட்டும் கனவு நிறைவு பெறாமல் போய்விட்டது என்பது சிஏஜி அறிக்கையின் மூலம் தெரியவரும் உண்மை.
சட்டம் ஒழுங்கை கட்டிக் காப்பதில் அ.தி.மு.க அரசு எந்த அளவில் அலட்சியமாக இருந்துள்ளது என்பதை இவ்வறிக்கை தோல் உரித்துக் காட்டுகிறது. காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தை அமல்படுத்திய அ.தி.மு.க அலட்சியம் காட்டியதால் 14 கோடி 37 லட்சம் செலவு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் உரிய முறையில் மின்சார வரி வசூலிக்கப்படவில்லை. இதனால் மாநில அரசின் வருவாய் பற்றாக்குறை அதிகரித்ததாக சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது. மேலும் 2018 இருந்து வசூலிக்கப்பட்ட 70% மின் கட்டண தொகையை அரசு கணக்கில் செலுத்தப்படாமல் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலவச மடிக்கணினி மற்றும் இலவச காலனி வழங்கும் திட்டத்தில் அதிமுக ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளது. இலவச பள்ளி பணிகள் வழங்கும் அ.தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் 11.84 % அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையின் விகிதம் குறைந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையை மிக அலட்சியமாக கையாண்டதாக சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த சி.ஏ.ஜி குறித்து சட்ட வல்லுனர்களுடன் சட்டப்பூர்வமாக ஆலோசித்து தமிழ்நாடு அரசு அதற்கான முடிவை எடுக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!