Tamilnadu
கிணற்றில் குளிக்கச் சென்ற நண்பர்கள்.. நீச்சல் தெரியாததால் நடந்த விபரீதம்: கதறி அழுத உறவினர்கள்!
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பள்ளிச் சிறுவன் வசீகரன். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தங்கள் பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது முத்துக்குமார் மற்றும் பாண்டி செல்வன் இருவருக்கு மட்டும் நீச்சல் தெரியும் என்பதால் அவர்கள் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். மேலும் வசீகரன், பிரசன்னா ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் இவர்கள் இருவரும் கிணற்றின் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென வசீகரன் படிக்கட்டிலிருந்து தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முத்துக்குமார் உடனே வசீகரனை மீட்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் வசீகரன் நீரில் மூழ்கியுள்ளார்.
இதுபற்றி காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வசீகரனைச் சடலமாக மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து நண்பர்கள் முன்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!