Tamilnadu
திமுக குறித்து அவதூறு : “அண்ணாமலை சிறைக்கு செல்வது உறுதி.. காரணம்..” - திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு !
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆரம்ப காலத்திலே ஆதாரமற்ற குற்றசாட்டுகளை பலர் மீது வைத்து வருகிறார். அண்மைக்காலமாக அவரை எதிர்த்து கேள்வி கேட்டால், அவர்களை அவமரியாதை செய்வது உள்ளிட்ட விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஆதரமற்ற குற்றசாட்டுகளை வைத்த அண்ணாமலையை, ப்ரெஸ் மீட்டிங்கில் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.
ஆனால் அதற்கு முறையான பதில் கூறாமல், அவர்களை அவமரியாதையாக பேசினார். அதுமட்டுமின்றி முறையான ஆதாரத்தை காட்டுவதாக கூறி, அதனை காட்டவும் மறுத்தார். ஆரம்பத்தில் இருந்தே அவர் இப்படி செய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் ஆதாரமற்ற போலி ஊழல் குற்றசாட்டை வைத்தார்.
இதையடுத்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இனி மேலும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளனர்.
இந்த சூழலில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராகவும், திமுகவின் முன்னணி பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி, இதுபோன்ற போலி குற்றச்சாட்டுகளை சுமத்திய அண்ணாமலை விரைவில் சிறைக்கு செல்வார் என்று தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பேரூராட்சியில் திமுக தலைவரும், தமிழ்நாட்டு முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் ஐ.லியோனி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை விரைவில் சிறைக்கு செல்வது உறுதி. காரணம் மான நஷ்ட ஈடு வழக்கை தொடுத்தவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திமுக தொடுத்த வழக்கில்தான் ஜெயலலிதா ஏ1 குற்றவாளியாகவும், சசிகலா ஏ2 குற்றவாளியாகி சிறைக்கு சென்றனர்.
அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு பல ஊழல் ரகசியங்களை வெளியிடுவதாகவும் அறிக்கை விட்டிருந்தார். ஆனால் இதுபோல் அறிக்கை விட்டவர்கள் எல்லாம் பலர் இப்போது சிறையில் இருக்கின்றார்கள்." என்று தெரிவித்தார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!