Tamilnadu
“சாகும் வரை..”-ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்.. உயிரை விட்ட பள்ளி சிறுமி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னையை சேர்ந்தவர் குணசீலன். இளைஞரான இவர், வீடுகளில் பேப்பர் போடும் வேலை செய்து வந்தார். இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு இந்த இளைஞர் தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் 13 வயது மகளுடன் சாதாரணமாக பழகி வந்துள்ளார். இந்த சூழலில் அந்த சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிறுமியின் ஆபாச வீடியோக்களை காட்டி சிறுமியிடம் மிரட்டி வந்துள்ளார் குணசீலன். இதனால் மனமுடைந்த சிறுமி சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். ஆனால் அந்த இளைஞரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, 2020-ம் ஆண்டு தனது வீட்டின் குளியறையின் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில் சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது வரை நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
இது தொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலெட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குணசீலனின் குற்றம் நிரூபணம் ஆனதால், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவரை சாகும் வரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு ரூ.3 லட்சம் அபாரதமும் விதித்து, அந்த தொகையை பாதிக்கப்பட்ட்ட சிறுமியின் பெற்றோருக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
அப்படி அபராத தொகையை செலுத்த தவறினால், குற்றவாளி குணசீலனின் அசையும், அசையா சொத்துக்கள் மூலம் அபராத தொகையை வசூலிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இளைஞர் ஒருவர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் 3 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !