Tamilnadu
திருடிய நகைகளில் பங்கு.. அடித்துக்கொண்ட திருடர்கள்.. இறுதியாக நடந்த ட்விஸ்டால் போலிசில் சிக்கிய கும்பல் !
உதகை நகரிலுள்ள பகுதி ஒன்றில் இன்று பகல் 2 நபர்கள் மது போதையில் நகைகளை கையில் வைத்து கொண்டு சண்டை போட்டுகொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, அந்த பகுதியிலுள்ள உதகை B1 காவல் துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் கைகளில் 5 செயின்கள், 5 மோதிரங்கள், 3 ஜோடி கம்மல்கள் இருந்ததை கண்டனர். இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரித்தனர். அந்த அப்போது அந்த 2 பேரும் உதகை மிஸ்னரி ஹில்ஸை சேர்ந்த கண்ணன் (50) என்பதும், உதகை உட்லாண்ட்ஸ் குப்பத்தை சேர்ந்த மோகன் (57) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் நேற்று இரவு உதகை கீழ்தலையாட்டு மந்தை சேர்ந்த திம்மைய்யா (43) என்பவரது வீட்டில் நகைகளை திருடியதும் கண்டறியப்பட்டது.
மேலும் இரவில் திருடிய நகைகளை இன்று மதியம் பங்கு போடும் போது தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்ற்னர். அதோடு அவர்களிடம் இருந்த 5 சவரன் நகைகளையும் மீட்டனர்.
தொடர்ந்து அவர்கள் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடிய நகைகளை குடி போதையில் பங்குபோட சண்டையிட்டு திருடர்கள் சிக்கி கொண்ட சம்பவம் உதகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!