Tamilnadu
அமேசான் பெயரில் இப்படி ஒரு Message வந்தா உஷார்.. பொதுமக்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை!
அமேசான் நிறுவனத்திலிருந்து அனுப்புவது போல கிப்ட் கார்டு அனுப்பி பண மோசடி செய்யும் கும்பலிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சைபர் குற்றவாளிகள் நாள்தோறும் தங்களது குற்ற வகையினை மாற்றிக்கொண்டு புது யுக்தியினை கையாண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர்.
தற்பொழுது அமேசான் ஆன்லைன் நிறுவனத்தின் 9வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு லக்கி பரிசு போட்டி நடத்தியதாகவும், அதில் நீங்கள் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் ஒரு கடிதம் வீட்டிற்கு அனுப்பப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தின் லோகோ பதிக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் வெற்றியாளர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள் என்று டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், போன், லேப்டாப் மற்றும் ரொக்கத்தொகை ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த கடிதத்துடன் ஒரு ஸ்க்ராட்ச் கூப்பன் சேர்க்கப்பட்டிருக்கும்.
இந்த கூப்பனை ஸ்க்ராட்ச் செய்து அதில் உள்ள குறியீட்டு கோடினை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஹெல்ப் லைன் நம்பருக்கு போன் செய்து தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை நம்பி தொடர்பு கொள்ளும் போது பொது மக்களிடம், குற்றவாளிகள் விலை மதிப்புள்ள பரிசுகள் பொது மக்களின் பெயரில் விழுந்திருப்பதாகக் கூறுவர்.
மேலும் அந்தப் பரிசு அல்லது ரொக்கத்தைப் பெறுவதற்கு IGST, CGST, SGST போன்ற வரிகளை கட்ட வேண்டும் என்று கூறி பணம் அனுப்பச் சொல்வார்கள். அதை அனுப்பும் பட்சத்தில் மேலும் கரண்ட் சேவை வரி வருமான வரி என்று கூறி பணம் அனுப்பச்சொல்லி ஏமாற்றுவர்.
ஆனால் பரிசோ, பணமோ பொது மக்களுக்கு வந்து சேராது எனவே பொது மக்கள் பெரிய நிறுவனங்களிலிருந்து பரிசு விழுந்திருப்பதாகக் கடிதமோ, இமெயிலோ வந்தாலோ, போன் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு யாரேனும் பேசினாலோ அதை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற மோசடி செயல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Also Read
-
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! : தி.மு.க சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!
-
“நான் முதல்வனின் அடுத்த version-ல் சர்வதேச அளவிலான சாதனைதான்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
UPSC முடிவுகள் வெளியானது! - ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்று அசத்தல்!
-
டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா…பும்ரா குறித்து சஞ்சு சாம்சன் சொன்ன அந்த வார்த்தை!
-
“‘பட்டா’ என்ற பல ஆண்டு கனவை நம்முடைய அரசு இன்றைக்கு நனவாக்கி இருக்கிறது!” - துணை முதலமைச்சர் உதயநிதி உரை!