Tamilnadu
சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி.. எத்தனை மணி நேரத்தில் கோவை செல்லும்?
ஹைதராபாத்தில் இன்று காலை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்து விட்டு பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு மதியம் பிரதமர் மோடி வருகை தந்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பிரதமர் மோடிக்கு Gandhi Travel in TamilNadu என்ற புத்தகத்தைப் பரிசளித்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் புதிய முனையத்தைச் சுற்றிப்பார்த்தனர்.
பின்னர் அங்கிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையைக் கொடியசைத்து பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னையில் இருந்து மைசூர் வரை வந்தே பாரத் ரயில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கியுள்ளது.
இந்த வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து கோவைக்கு 160 கிமீ வேகத்தில் 490 கி.மீ தூரத்தை 5.50 மணி நேரத்தில் சென்றடையும். இன்று முதல் நாள் என்பதால் பெரம்பூர், அரக்கோணம், குடியத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, , சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என்று ரயில்வே துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!