Tamilnadu

நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு.. நீச்சல் பயிற்சியில் சேர்ந்து 10 நாளில் நடந்த சோகம்!

சென்னை ஓட்டேரி- படாளத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் குப்தா. இவரது மகன் தேஜா குப்தா. 7 வயது சிறுவனான தேஜா குப்தா வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இதையடுத்து சிறுவன் சென்னை பெரியமேடு மை லேடி பூங்கா வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில்நடைபெறும் கோடைகால நீச்சல் பயிற்சியில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சேர்ந்தார். இதையடுத்து தினமும் நீச்சல் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

அதன்படி நேற்று மாலை 6 மணியளவில் தாத்தா சசிகுமாருடன் சிறுவன் தேஜா குப்தா நீச்சல் பயிற்சிக்கு சென்றுள்ளார். அங்கு பயிற்சியாளர்கள் செந்தில்,சுமன் ஆகியோரிடம் சிறுவனை நீச்சல்குளம் அருகே சசிக்குமார் அமர்ந்திருந்தார். பயிற்சியாளர்கள் 15க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் தேஜா குப்தா நீரில் மூழ்கியுள்ளார்.

இதைபார்த்த பயிற்சியாளர் செந்தில் சிறுவனை மீட்டு இருசக்கர வாகனத்தில் அருகே இரந்த ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரிய மேடு போலிஸ்ர் வழக்குப்பதிவு செய்து பயிற்சியாளர்கள் செந்தில், சுமன் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயிற்சியாளர்களின் கவனக்குறைவு காரணமாகவே தனது மகன் உயிரிழந்துள்ளார் என சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: சேற்றில் சிக்கிய அர்ச்சகரை காப்பாற்ற சென்ற 5 பேர் கோவில் குளத்தில் மூழ்கி பலி.. முதலமைச்சர் இரங்கல் !