Tamilnadu
கெத்தாகப் பேருந்து ஓட்டி அசத்தும் கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர்.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்!
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மகேஷ். இவரது மகன் ஷர்மிளா. இவர் வி.வி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இதன் மூலம் இவர்தான் கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையையும் ஷர்மிளா பெற்றுள்ளார்.
கோவை காந்திபுரம் to சோமனூர் வழியில் பேருந்தை இயக்கி வரும் ஷர்மிளா என்ற பெண் ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் வளர்ந்துள்ளார்.
இது குறித்துக் கூறும் ஷர்மிளா, "எனக்கு 7ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே வாகனங்களின் மீதான ஆர்வம் வந்துவிட்டது. இதனால் இருசக்கர வாகனம், பேருந்து, ஆட்டோ, கனரக வாகனங்களை ஓட்டவேண்டும் என ஆசைப்பட்டேன்.
என் ஆசைக்கு எனது பெற்றோர் எந்த தடையும் போடவில்லை. எனது அந்த ஆட்டோ ஓட்டுநர் என்பதால் அவர் எனக்கு ஆட்டோ ஓட்டப் பயிற்சி கொடுத்தார். பின்னர் தந்தைக்கு உதவியாக நான் தனியாகவே ஆட்டோவை ஓட்டிவந்தனர்.
இதையடுத்து கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று இதற்கான உரிமமும் பெற்று உள்ளேன். ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
தற்போது காந்திபுரம் to சோமனூர் வழியில் தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். முதலில் நான் ஓட்டுநராகப் பயிற்சி சென்றபோது பலரும் என்னைக் கிண்டல் செய்தார்கள். இன்று அவர்கள்தான் என்னை பாராட்டுகிறார்கள். வாழ்த்து தெரிவிக்கிறார்கள். எனக்கு இது பெருமையாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், "கோயம்புத்தூரில் என் பொண்ணு தான் முதல் பெண் பஸ் டிரைவர்னு சொல்லும்போது அது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது" என தெரிவித்துள்ளனர்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!