Tamilnadu
ரூ.30 கோடி சொத்து இருந்தும் சாப்பாடு கூட தராமல் கொடுமை படுத்திய மகன்.. விபரீத முடிவெடுத்த வயதான தம்பதி!
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் சந்திரா. இவரது மனைவி பாக்லி தேவி. இந்த வயதான தம்பதிக்கு மகேந்தர், வீரேந்திர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த இருவருக்கும் திருமணம் முடிந்து அவர்களது மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
பின்னர் மகன்களுக்குத் திருமணம் முடிந்து விட்டதால் இந்த வயதான தம்பதி, மகன் மகேந்தர் உடன் வசித்து வந்தனர். இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் மருமகள் முதிய தம்பதியை வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
இதையடுத்து அந்த தம்பதி மற்றொரு மகன் வீரேந்திர் உடன் வாழ்ந்து வந்தனர். இவருக்கு ரூ.30 கோடியில் சொத்து இருந்தும் தனது பெற்றோருக்கு ஒருநாளைக்கு ஒரு வேளை கூட உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மூத்த தம்பதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன் படி பூச்சிகளை அழிக்கும் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வயதான தம்பதி தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதில், குடும்பத்தாரின் கொடுமை தாங்காமல் நாங்கள் இந்த முடிவை எடுக்கிறோம். எங்கள் மரணத்திற்கு மகன் வீரேந்தர் மற்றும் இரண்டு மருமகள்களும்தான் காரணம் . அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும் என உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளனர்.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!