Tamilnadu
ஸ்பா சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில்.. 2 பெண்கள் மீட்பு - அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை!
சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலை உள்ள ஆரோ பியூட்டி சலூன் அண்ட் ஸ்பா என்கின்ற ஸ்பா சென்டரில் பாலியல் தொழில் நடத்துவதாக விருகம்பாக்கம் போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலிஸார் ஸ்பா சென்டரில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இப்பொழுது ஸ்பா சென்டரில் சோதனை மேற்கொண்ட போது சென்னை புது வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெரு பகுதியை சேர்ந்த சாரதா (39) என்கின்ற பெண் ஸ்பா சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது போலிஸாருக்கு தெரிய வந்தது.
இதனை அடுத்து ஸ்பா சென்டர் உரிமையாளர் சாரதாவை விருகம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து போலிஸார் விசாரணை மேற்கொண்டார். போலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சாரதா உரிய உரிமம் பெறாமல் ஸ்பா சென்டரை நடத்தி வந்தது தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி ஸ்பா சென்டர் என்கின்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததும் போலிஸார் விசாரணைகள் தெரிய வந்தது. இதனை அடுத்து விருகம்பாக்கம் போலிஸார் சாரதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் விருகம்பாக்கம் போலிஸார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!