Tamilnadu
“Happy Street நிகழ்ச்சிக்கு வரவேற்பு கூடியுள்ளது.. தொடர்ந்து நடத்த ஆலோசனை” : காவல்துறை இணை ஆணையர் பேட்டி!
சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணா நகர், பெசன்ட் நகர், தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் பரபரப்பான சூழலில் நிலவும் பகுதியாகும். சென்னையின் போக்குவரத்து நெரிசலான பகுதிகளை மறக்க ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய போக்குவரத்து இல்லா சாலை என்னும் ஹாப்பி ஸ்டீரிட் (happy Street) நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், பெருநகர மாநகராட்சி சென்னை, ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து இன்று காலை தியாகராஜ நகர் பாண்டி பஜாரில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், பம்பரம் விடுதல், கோணி பை தாவுதல், டயர் ஓட்டுதல், கயிறு இழுத்தல், செஸ், பரமபதம், கராத்தே, கோலமிடுதல், பாட்டு போட்டி, நடனம், நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கான நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.
மேலும் தப்பாட்டம், மயிலாட்டம், பறை இசை போன்றவை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது, இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். காவல்துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்று இருந்தது.
பொதுமக்கள் மத்தியில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்னும் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு உள்ளதால் அதை மேலும் தொடர்வது குறித்து ஆலோசிக்க உள்ளோம் என சென்னை தெற்கு சரக போக்குவரத்து இணை ஆணையர் மயில்வாகனன் தெரிவித்தார். மேலும், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னையில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியான வரவேற்கத்தக்கது.
இதேபோன்ற அனைத்து பெரு நகரங்களிலும் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும். இது என் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இங்கு உள்ள பொழுதுபோக்கு அம்சங்களுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்ததாக சிறுவர்கள் தெரிவித்தனர்.
Also Read
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!
-
அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!