Tamilnadu

”கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் கூட்டுறவுத்துறை”.. அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்டுறவுத் துறை சார்பில் அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் 2021-2022 ம் ஆண்டு மானிய கோரிக்கை அறிவிப்புகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், 2023- 24 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது வெளியிட முன்மொழியப்படும் அறிவிப்புகள் குறித்தும் 07.05.22 முதல் 28.2.23 வரை கூட்டுறவுத் துறையில் தொடர்பான சாதனைகள் விவரம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன்," தி.மு.க அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2022-2023 வரை 16 லட்சத்து 46 ஆயிரம் விவசாயிகளுக்குக் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.இதுவரை இல்லாத அளவுக்கு 12,679 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு

5013 கோடி ரூபாய் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 20 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவில் கூட்டுறவுத் துறை சார்பில் கடன் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தனியார் வங்கிகளுக்கு இணையாகக் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டமைப்பு உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

கணவனை இழந்து தனியாக வாழும் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்கி வருகிறோம். நவீன சாதனங்களைப் பயன்படுத்தி எல்லாவிதமான சேவைகளைச் செய்யும் வகையில் கூட்டுறவு வங்கிகள் மேம்படுத்தப்படும் . பல இடங்களில் வாடகை கட்டடங்களில் வங்கி இயங்கி வருவது குறித்த கேள்விக்கு நிதி வசதியைப் பொறுத்து படிப்படியாக மேம்படுத்தப்படும்.

கிராமப்புறங்களில் 30 % வரை உரமாகவே விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் வந்துள்ளது. ஆகவே எந்த காலத்தில் என்ன உரங்கள் தேவைப்படுகிறது என்பதற்கு ஏற்ப கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாகக் கிராமப்புறங்களில் உரங்கள் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கூட்டுறவுச் சங்கம் தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி தேர்தலுக்காக முறைப்படுத்துவதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது பணிகள் முடிந்த பிறகு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கும் இதில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: “ஆளுநருக்கு இதயம் இருக்க இல்லையா? - மசோதாவை திருப்பி அனுப்புவது நியாயமற்றது”: அமைச்சர் கடும் கண்டனம்!