Tamilnadu

வேலைவாய்ப்பு முகாமில் தகராறு செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி.. அதிரடியாக கைது செய்த போலிஸ்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு கல்லூரியில் மார்ச் 4ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் மன்னார்குடி மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாம் அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கு ,நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில தலைவர் இராம. அரவிந்தன் மற்றும் சிலர் வேலைவாய்ப்பு முகாமில் பணியில் இருந்த அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தகராறு செய்தனர். இதனால் அமைதியாக நடந்து கொண்டிருந்த வேலைவாய்ப்பு முகாமில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் நாம் தமிழர் கட்சியின் செயல் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்த நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில தலைவர் இராம. அரவிந்தன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மன்னார்குடி போலிஸார் வழக்குப் பதிவு செய்து இராம.அரவிந்தனை கைது செய்து உள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: வடமாநில தொழிலாளர் குறித்து வதந்தி.. பாஜக ஆதரவு ஊடகமான opindia மீது வழக்கு.. தமிழ்நாடு காவல்துறை அதிரடி !