Tamilnadu
"இந்தியாவிலேயே கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்க காரணம் திராவிட மாடல்": அமைச்சர் பொன்முடி பெருமிதம்
சென்னை பாரதி மகளிர் கல்லூரியின் 52-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், 1428 மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, "தமிழ்நாட்டில் எந்த பள்ளிகளை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் படிக்கக் காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கி திராவிட மாடல்தான். அரசியலுக்கானது அல்ல திராவிட மாடல். சமூக நீதிக்கானதுதான் திராவிட மாடல்.
அனைத்து பிரிவு மாணவிகளும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக மாதம் மாதம் ரூ.1000 கொடுக்கும் புதுமைப் பெண் திட்டம் உலகத்திலேயே முதன்முதலாகக் கொண்டு வந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். பாரதி மகளிர் கல்லூரி கட்டடங்கள் மற்றும் கட்டமைப்பைத் தரம் உயர்த்துவதற்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
புதிய கல்விக் கொள்கையில் 3,5,8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்கிறார்கள். 3,5,8 -ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தினால் எல்லாரும் படிப்பார்களா?. தமிழ்நாட்டுக்கு என்று மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. இருமொழி கொள்கையையே தமிழ்நாடு அரசு பின்பற்றி வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!