Tamilnadu

விடிந்தது கூட தெரியாமல் காருக்குள் முரட்டுத் தூக்கம்.. கார் கண்ணாடியை உடைத்து எழுப்பிய வாகன ஓட்டிகள் !

கவுண்டம்பாளையம் கோயம்புத்தூரில் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். எப்போதும் பரபரப்பாக செயல்படும் அங்கு காலை வேலையில் பாலத்துக்கு கீழே வெகுநேரம் கார் ஒன்று நின்றுள்ளது. முக்கிய சாலையில் அந்த கார் நின்றதால் அங்கு போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதியில் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். கார் வெகுநேரம் அந்த பகுதியில் இருந்து எடுக்கப்படாததால் சந்தேகமடைந்த வாகன ஓட்டிகள் அந்த காரின் அருகே சென்றபோது அதன் உள்ளே ஓட்டுநர் கால் நீட்டியபடி தூங்கிக்கொண்டிருந்ததை பார்த்துள்ளனர்.

மேலும், அவரை சத்தமிட்டு எழுப்பியபோது எழுந்தரிக்காத நிலையில், காரின் கண்ணாடியை தட்டியும், அடித்தும் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அவர் எழாத நிலையில், அவர் மயங்கியிருக்க கூடும் என நினைத்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

காவல்துறையினர் வந்து பார்த்த நிலையிலும் அவர் எழாத நிலையில், காரின் கண்ணாடியை உடைத்து அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். அப்போதுதான் காரின் இருந்தவர் கண்விழித்துள்ளார். அப்போதுதான் அவர் கடுமையான போதையில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

அவரின் பெயர் ரஞ்சித் என்பதும், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிவதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை எச்சரித்த போலீஸார் அவரை அனுப்பிவைத்தனர். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: டெல்லிக்கு வருவதையே அசவுகரியமாக கருதுகிறேன் -இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்தால் சர்ச்சை !