Tamilnadu
“மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த நடிகர் மயில்சாமி..” : திரைத்துறையினர் இரங்கல் !
1984-ம் ஆண்டு தாவனிக் கனவுகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சத்தியமங்கலத்தை சேர்ந்த மயில்சாமி பலகுரல் மன்னனாக திரைப்பட தொகுப்பாளராக பணியாற்றினார்.
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து உச்சம் தொட்டவர் மயில்சாமி.
தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மயில்சாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போரூர் போலிஸார் இறந்து போன காமெடி நடிகர் மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அவர் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இவரது மகன்களான அன்பு மயில்சாமி, யுவன் மயில்சாமி இருவரும் நடிகராக உள்ளனர்.
2021 தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர் மயில்சாமி. மயில்சாமியின் உடல் சென்னையிலையே இறுதி சடங்கு செய்யப்படவுள்ளது. மேலும் தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி பல்வேறு கூட்டங்களிலும், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று அனல் தெறிக்கும் தனது கருத்துக்களால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்த காமெடி நடிகர் மயில்சாமி இறப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !