Tamilnadu
ஏரியில் மீன்பிடிக்க சென்ற தந்தை மற்றும் 13 வயது மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலயம் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரும் இவரது 13 வயது மகன் ஆறுமுகமும் இணைந்து அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்கச் சென்று உள்ளார்.
அப்போது ஆறுமுகம் ஏரியில் இறங்கி வலையை பிரிந்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்ட மகன் பரத் ஏரியில் இறங்கி தந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஏரியில் மூழ்கிய ஆறுமுகம் மற்றும் அவரது மகன் பரத் ஆகியோர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இருப்பினும் பல மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு ஆறுமுகம் மற்றும் அவரது மகன் பரத் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டனர். பிறகு இருவரது உடலையும் உடற்கூறு ஆய்விற்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
மேலும் சம்பவம் குறித்து ஆற்காடு நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்காடு அருகே மீன் பிடிப்பதற்காகச் சென்ற தந்தை மகன் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கிப் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!