Tamilnadu

பள்ளி பாராளுமன்ற கூட்டம் : வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் - மேயர் பிரியா பேட்டி

எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதற்கும் மாணவிகளை சமூக நலனில் அக்கறை செலுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் பாராளுமன்றம் நடைபெற்றது. தண்டையார்பேட்டை மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற மாதிரி பாராளுமன்றத்தை சென்னை மாநகர மேயர் பிரியா, ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் ஆசிரியப் பெருமக்கள் பார்வையிட்டனர்.

பாராளுமன்றம் போன்று சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள் என மாணவிகளை நியமித்து அவர்களுடைய விவாதத்துடன் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சரின் பங்கு என்ன? நிதியமைச்சரின் பங்கு என்ன? மக்கள் நல திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன? என எதிர் விவாதத்துடன் எதிர்க்கட்சிகள் விவாதத்தனுடன் நடைபெற்றது.

வருங்கால சமுதாயத்தில் மாணவ மாணவியர்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றது என்பதற்காக எதிர்கால சமுதாயத்தை உருவாக்கவும் மக்களுக்கு பணியாற்றிடவும் நாட்டின் பிரச்னைகளை மக்களாகவே தீர்த்துக் கொள்ளும் வகையில் விவாதங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

இதில் பங்கேற்ற மேயர் பிரியா நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சரின் ஆலோசனைப்படி கடந்தாண்டு பெருநகர் சென்னை மாநகராட்சியில் ஏற்பட்ட பட்ஜெட் கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் பாராளுமன்ற கூட்டம் அமைக்கப்படும் என்று அறிவித்தோம். கடந்த ஓராண்டுகளாக மாநகராட்சி பள்ளிகளில் பாராளுமன்ற கூட்டம் அமைக்கப்பட்டு மாணவர்களிடையே பயிற்சி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு முழுவதும் 5 பிரிவுகளாக நடைபெற்ற இந்த நிகழ்வில் 70 பள்ளிகளில் 250 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று கடைசி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் மூன்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

மாணவருடைய திறன் வளர்ச்சி தலைமைப் பண்புகள் கருத்துக்கள் முன் வைப்பது குறித்து மேடையில் பேசும் பயத்தை இல்லாமல் இருப்பதற்காக இந்த மேற்கொண்டுள்ளார் இது மாணவருடைய நல்ல பயனடைந்துள்ளனர்" என்றார்.

Also Read: கடும் எதிர்ப்பு.. Trolls.. Memes.. - திரும்ப பெறப்பட்ட Cow Hug Day 2023 : விலங்குகள் நல வாரியம் அறிவிப்பு