Tamilnadu
உயிரிழந்த தோழி.. அடுத்த சில நாட்களிலேயே விபரீத முடிவெடுத்த நண்பன்: உறவினர்கள் அதிர்ச்சி!
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் செங்குன்றம் வரதராஜன் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். பட்டதாரி வாலிபரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர் கல்லூரி படிக்கும் போது அதே கல்லூரியில் படித்து வந்த பெண் ஒருவருடன் நண்பராகப் பழகி வந்துள்ளார். கல்லூரி முடிந்த பிறகும் இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த தோழி இறந்து விட்டார். இது பற்றி அறிந்த அசோக்கை கடுமையாக பாதித்துள்ளது. பிறகு இவர் யாருடனும் பேசாமல், அவ்வப்போது தனியாகவே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது அசோக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த போலிஸார் அசோக் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து உறவினர்களிடம் விசாணை நடத்தினர்.
இதில் தோழியாகப் பழகி வந்த பெண் திடீரென இருந்துவிட்டதால் மன உலைச்சல் அடைந்த அசோக் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோழி இறந்த துக்கத்தில் அசோக் என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!