Tamilnadu
திருமணம் நடந்து 3வது நாளில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கார் ஓட்டுநராக வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு அண்ணாநகரைச் சேர்ந்த ஷோபனா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து இவர்கள் திருமணம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது. திருமணம் முடிந்ததை அடுத்து புதுமன தம்பதிகள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு விருந்துக்காக சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மாமியார் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது செனாய் நகர் அருகே வந்தபோது நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து மணிகண்டன் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு கீழ்பாகக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மணிகண்டன் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நடந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!