Tamilnadu
'நான் பிறந்ததே பாவம்'.. பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மகன் எடுத்த விபரீத முடிவு!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரன். இவர் கன்னியாகுமரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பாராமெடிக்கல் சயின்ஸ் படித்து வந்தார். மேலும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிக் கொண்டு தினமும் வகுப்பறைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அறையில் இருந்த மாணவர்களிடம் கழிவறைக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் அறைக்கு திரும்பி வரவில்லை.
இதனால் சக மாணவர்கள் கழிவறைக்குச் சென்று தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் அங்கும் அவர் இல்லை. இதனால் விடுதியின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது சுமித்ரன் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் அவரது அறையில் சோதனை செய்தபோது சுமித்ரன் எழுதிச் சென்ற கடிதம் ஒன்று போலிஸாருக்கு சிக்கியது.
அதில், "நான் எனது பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக இருக்கவில்லை. என்னால் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியவில்லை. உலகில் நான் பிறந்ததே பாவம். என்னை மன்னித்து விடுங்கள்." என இருந்ததாக போலிஸார் கூறுகின்றனர். மேலும் சுமித்ரன் தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!