Tamilnadu
“சாதிப்பது முதல்வரின் மரபணுவிலேயே உள்ளது..” : கவிப்பேரரசு, மருத்துவர் மோகன் காமேஸ்வரன் புகழாரம் !
ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ் பேரவையில் நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ தமிழ் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்ச்சியில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “சாதிப்பது என்பதும் தொண்டு செய்வது என்பதும் ஆட்சி அதிகாரம் செய்வதும் முதல்வருக்கு மரபணுவிலுள்ளது என மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார் நாங்கள் நெகிழ்ந்து போனோம்.
முதலில் கல்வி, பின்னர் மருத்துவம் இவ்விரண்டையும் கண்ணாக எண்ணி பணியாற்றி வருகிறார் நம் முதல்வர் பன்னோக்கு மருத்துவமனையை இரவு பகலாக பணி நடக்கிறது அதனை கண்காணித்து வருகிறார்.
எய்ம்ஸை எட்டும் முன் முதல்வர் தன் எய்ம்யை எட்டிவிடுவார். முதல்வர் ஆட்சிக்கு வரும் போது நோய் காலமாக இருந்து அதனை எதிர்கொண்டு வென்றார் நோயை வெல்வது எப்படி என்று காட்டினார். கொரோனாவை எதிர்கொண்டு வென்றவர் நம் முதல்வர்.
கொரோனா காலத்திலும் தன் திறனை பயன்படுத்தி வென்றவர். நோயாளிக்கும் தங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீங்கள் தமிழால் குறைக்கிறீர்கள்..ஒரு ஆய்வில் எத்தனை பேருக்கு மருத்துவர் என்று சொல்கிறது 2000பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. ஆனால் 1000பேருக்கு ஒரு மருத்துவர் தேவை.
செவிலியர்கள் இங்கு படித்து விட்டு வெளி நாடுகளுக்கு செல்கிறார்கள் அவர்கள் இங்கேயே வேலை செய்யவேண்டும். நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையிலான இடைவெளி இம்மாநாட்டின் மூலம் குறையும் என நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பேசிய மருத்துவர் மோகன் காமேஸ்வரன், “ நாட்டிலேயே சிறந்த மாநிலம் நம் தமிழ்நாடு, நாட்டிலேயே சிறந்த முதல்வர் நம் முதல்வர். இது பிற மாநிலங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆனால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஏன் என்றால், அவர் முத்தமிழறிஞரின் அன்பு புதல்வர் எடுத்த காரியத்தை வெற்றி பெறுவது, அவரது மரபணுவிலேயே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!