Tamilnadu
காதலியுடன் சண்டை : நடுரோட்டில் தனக்கு சொந்தமான ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை எரித்த காதலன்!
மனிதர்களுக்குக் கோபம் வந்தால் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. சில நேரங்களில் இந்த கோபம் கொலை செய்யவும் வழிவகுத்து விடுகிறது. அதனால் தான் மனிதர்கள் கோபம் அடையக் கூடாது என அடிக்கடி சொல்லப்பட்டு வருகிறது. காதலியுடன் ஏற்பட்ட சண்டையில் கோபம் பட்ட காதலன் ஒருவன் தனது சொந்த காரையே எரித்த கொடுமை காஞ்சிபுரம் அருகே நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவின். இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு படித்து முடித்துள்ளார். படிக்கும் போது அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து தனது காதலியுடன் காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் சென்றபோது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபம் அடைந்த கவின் ரூ.70 லட்சம் மதிப்பில்ல தனது சொந்தமான பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதைப்பார்த்து காதலியும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!
-
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!
-
“சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை” : தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
-
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் : ரூ4.12 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் அசத்தல்!