Tamilnadu
ஆண் நண்பருடன் பேசியதை கண்டித்த கணவன்.. விரக்தியில் விபரீத முடிவெடுத்த மனைவி: உறவினர்கள் அதிர்ச்சி!
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் புவனேஷ்வரிக்கு அண்ணாநகர் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. பிறகு இவர்கள் இருவரும் நண்பர்களாகப் பழகி வந்தனர். இதனால் செல்போனில் அடிக்கடி அந்த ஆண் நண்பருடன் பேசி வந்துள்ளார்.
இது பற்றி அறிந்த கணவன் சுரேஷ், நண்பருடன் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து கூறி கண்டித்துள்ளார். ஆனால் மனைவி தனது நண்பருடன் பேசிவந்துள்ளார். அப்படி நேற்றிரவும் தனது ஆண் நண்பரிடம் புவனேஷ்வரி செல்போனில் பேசி வந்துள்ளார். இதைப்பார்த்துக் கடுப்பான கணவன் சுரேஷ் மனைவியை மீண்டும் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த புவனேஷ்வரி வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு, மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். இவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த உறவினர்கள் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அருகே ஆண் நண்பரிடம் பேசியதைக் கணவன் கண்டித்ததால், மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!