Tamilnadu
“அதிமுக ஆட்சியில் எடப்பாடி தொகுதியின் நிலை இதுதான்”: EPSன் சொந்த தொகுதி அவலத்தை அம்பலப்படுத்திய அமைச்சர்!
தமிழ்நாடு முழுவதும் 1021 மருத்துவர்களை நியமிப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடப்பாடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, வீரபாண்டி, ஓமலூர், ஏற்காடு உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தின் மருத்துவ கட்டமைப்புகளை மாற்றி அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதியதாக நகர் புற நல்வாழ்வு மையங்கள் 35 இடங்களில் கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளது. இதே போன்று தமிழ்நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டப்பட்டு உள்ள நல்வாழ்வு மையங்களை பிப்ரவரி மாதத்தில் முதலமைச்சர் திறந்து வைத்திட உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் வாடகை கட்டிடங்களில் இயங்கும் 22 ஆரம்ப சுகாதார நிலையங்களை மாற்றி புதிய கட்டிடங்கள் கட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சேலத்தில் மருத்துவ கட்டமைப்புக்கக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டு வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து விரிவான அறிக்கை கொடுத்தும், அரசியலுக்காக அவர் பேசி வருகிறார்.
10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, எப்படி மக்களுக்கு தொடர்பு இல்லாமல் இருந்தாரோ, அதே போன்று தான் தனது தொகுதியான எடப்பாடி தொகுதியில் உள்ள மக்களுக்கும் தொடர்பு இல்லாமல் உள்ளார். அவரது தொகுதியிலேயே அவர் மக்களுக்கு தொடர்பு இல்லை என்பதனை காட்டுகிறது. எடப்பாடியில் மக்களை தேடி மருத்துவத்தில் பயன் அடைந்தவர்கள் ஏராளம். இதை அவர் தெரிந்து கொள்ள வில்லை.
10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அவர், எடப்பாடி மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை கூட செய்து தரவில்லை என்பதும் இந்த மருத்துவமனை ஆக்கிரமிப்பில் இருப்பது கூட தெரியாத நிலையில் தான் இருந்து இருக்கிறார். இதேபோன்று சேலம் மாவட்டத்தில் 22 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவது கூட தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி இருந்து வந்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் மருத்துவர்கள் 1021 பணியிடங்கள் மற்றும் செவிலியர்கள் தேர்வு என்பது நடைபெற்று கொண்டு இருப்பதாகவும், 15 வது நிதிக்குழுவில் இருந்து வர வேண்டிய 800 கோடி ரூபாய் பணம் விரைவில் வர உள்ளதாகவும் அவை வர பெற்றவுடன் மீதமுள்ள அனைத்து பணிகளும் நடைபெறும் என்று உறுதி அளித்தார். பேட்டியின் பொழுது நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு உடன் இருந்தார்
Also Read
-
ரூ.25.72 கோடி செலவில் ‘பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“Computer Expert பழனிசாமியின் கனவு பலிக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
-
அமெரிக்க வரிவிதிப்பு : விரைவில் தீர்வு காண வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!