Tamilnadu
"காந்தி சொன்னதைபோல் ஆளுநர் மாளிகைகளை மருத்துவமனைகளாக பயன்படுத்தலாம்": வைகோ கோரிக்கை!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக ஒவ்வொரு நாளும் பேசி வருகிறார் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, "தி.மு.க அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் செல்வாக்கை பெற்று வருகிறது. இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக இன்று தமிழ்நாடு திகழ்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி கட்சி ஆதரவுடன் போட்டியிடும் காங்கிரஸ் பெரிய வெற்றியை பெரும். தந்தை பெரியாரின் மண்ணில், பா.ஜ.க கட்சியின் சனாதன முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது. அவர்கள் கோடிக்கணக்கில் பணம் செலவழித்தாலும் இடைத்தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியாது.
ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. அரசியலில் தோற்றுபோனவர்களுக்கு கொடுக்கும் பதவிதான் இந்த ஆளுநர் பதவி. இவர்களுக்காகத்தான் ஆளுநர் மாளிகைகளும் உருவாக்கப்பட்டன. இந்த ஆளுநர் மாளிகைகளை ஏழை, எளிய மக்களுக்கான மருத்துவமனைகளாகப் பயன்படுத்தலாம் என மகாத்மா காந்தி கூறினார். எனவே ஆளுநர் மாளிகைகளை மருத்துவமனைகளாக மாற்றலாம்.
தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தினந்தோறும் அரசியல் சட்டத்திற்கு புறம்பாகப் பேசி வருகிறார். தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்லிவிட்டு தற்போது போலித்தமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இதில் இருந்தே தெரிகிறது அவருக்குத் தமிழ்நாட்டை பற்றி எதுவும் தெரியவில்லை என்று" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!