Tamilnadu
“காஷ்மீர் போகனுமா?.. கவலை வேண்டாம்.. தமிழ்நாட்டின் மினி காஷ்மீர் போங்க” : நடுங்க வைக்கும் உறைபனி!
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் காணப்படும். குறிப்பாக நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி ஆரம்பித்து படிபடியாக உறைபனி பொழிவு காணப்படும், ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை காரணாத்தால் பனிபொழிவு தாமதமாக ஜனவரி மாதத்தில் துவங்கியுள்ளது.
இதனால் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவுகிறது. இந்த நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி பொழிவு காணப்பட்டது. உறைபனி பொழிவு காரணமாக உதகை அரசு தாவரவியல் பூங்கா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் புல்வெளிகள் மீது உறைபனி பொழிவு அரை அங்குலத்திற்கு மேல் வெள்ளை கம்பளம் போல் காணப்பட்டது.
குறிப்பாக உதகை நகர், தலைகுந்தா , HPF, காந்தல், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி புள்வெளிகளிலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது படிந்திருந்தது. இதனால் உதகையில் கடுங்குளிர் நிலவுகிறது. தற்போது குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.
கடுங்குளிர் காரணமாக அவலாஞ்சி பகுதியில் Oடிகிரி செல்சியஸ் கீழ் - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியும், உதகை சுற்றுவட்டார பகுதிகளில் பத்தாவது நாளாக O டிகிரி செல்சியஸ்சும், உதகை நகரப்பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அவளாஞ்சி, அப்பர் பவானி பகுதிகளில் நிலவிய கடும் உறைப்பனி பொழிவு காரணமாக மினி காஷ்மீர் போல் காட்சியளித்தது.
Also Read
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!