Tamilnadu
"உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொல்பவர்களுக்காக"- இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அமைச்சர் மா.சு!
இன்றைய காலகட்டத்தில் எல்லா வயதினருக்கும், எல்லா தரப்பினருக்கும் அவசியமானது உடற்பயிற்சி. வெகுவாக மாறிய வாழ்க்கை முறைகளால் சிறு வயதிலேயே பல்வேறு நோய்களுக்கும் ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், தற்போது மருத்துவத்துறை அமைச்சராக உள்ள ச மா.சுப்பிரமணியன் உடற்பயிற்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறார். பல்வேறு மாரத்தாங்களில் ஓடி பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
இவர் தற்போது அமைச்சராக இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்வதோடு இளைஞர்களிடம் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்து பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
நேற்று காலை 10 மணிக்கு தஞ்சை மருத்துவமனை நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் 7.15 மணிக்கு திருச்சியில் இறங்கிய அமைச்சர் நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டரை மணி நேரம் இருப்பதால் அதை வீணாக்கக்கூடாது என திருச்சி தஞ்சை Bypass ல் 10km ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், "இன்று காலை 10 மணிக்கு தஞ்சை மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் 7.15 மணிக்கு திருச்சியில் இறங்கி இரண்டரை மணி நேரம் வீணாகி விடக்கூடாது என்பதற்காக திருச்சி தஞ்சை Bypass ல் 10km ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டோம் . இப்பதிவு உடற் பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொல்பவர்களுக்காக" என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
”சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அடக்குமுறையின் உச்சம் - பா.ஜ.கவின் சர்வாதிகார சட்டத்திற்கு முரசொலி தலையங்கம் கடும் கண்டனம்!
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!