Tamilnadu

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை ஓராண்டுக்குப் பின் கண்டுபிடித்த மகனின் பாசப்போராட்டம்.. நெகிழ்ச்சி சம்பவம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நன்னீகுளத்தை சேர்ந்த உஷாராணி (44). இவர் என்பவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியே சென்றவர். வீடு திரும்பவில்லை இவரது மகன் ராகேஷ் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார் தனது தாய் காணாமல் போனதை கேள்விப்பட்டு ராகேஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பக்கத்து ஊர், கோயில்கள் என பல இடங்களில் தனது தாயை தேடி அலைந்துள்ளார். இதற்கிடையில் உஷாராணி வழி தெரியாமல் திருநெல்வேலி மாநகர பகுதியில் சாலையில், தவித்த போது சோயா அறக்கட்டளை ஊழியர்கள் அவரை வீட்டில் டவுனில் உள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பாத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் மனநல சிகிச்சை அளித்து வந்தனர். உடல் நலம் சரியானதும் உஷாராணியிடம் நீங்கள் யார் எந்த ஊர் என்ற விவரத்தை கேட்ட போது தனக்கு சாத்தான்குளம் என்பதையும் தனது மகன் திருவனந்தபுரத்தில் பணிபுரிவதையும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சோயா அறக்கட்டளை நிர்வாகி சரவணன் சாத்தான்குளத்திற்கு நேரில் சென்று உஷாராணியின் வீட்டின் அருகில் விசாரித்துள்ளார். பின்னர் அவரது மகன் ராகேஷ் தொடர்பு எண்ணை வாங்கி பேசியுள்ளார். தனது தாய் காப்பகத்தில் இருப்பது அறிந்த ராகேஷ் அவரக பார்க்க கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரில் வந்துள்ளார்.

ஒரு வருடங்களாக காணாமல் போன தாயை தேடிய ராகேஷ் அவரை கண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் உஷாராணி அவரது மகன் ராஜேஷ்சிடம் ஒப்படைக்கப்பட்டார் ராகேஷ் மகிழ்ச்சியுடன் அவரை அழைத்துச் சென்றார்.

இதுகுறித்து உஷாராணி செய்தியாளர்களிடம் கூறும்போது, வழி தெரியாமல் இங்கு வந்து விட்டேன் என்னை காப்பகத்தில் ஒப்படைத்தார்கள் மகனுடன் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார். இதுகுறித்து சோயா அறக்கட்டளை நிர்வாகி சரவணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆட்சியர் உதவியோடு தான் உஷாராணி மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் கடந்த ஒரு ஆண்டுகளாக அவரது உறவினர்களை தேடி வந்தோம் தற்போது மகனை தேடி கண்டுபிடித்து ஆட்சியர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டார் என தெரிவித்தார்.

Also Read: AR.ரகுமான் ஃபிலிம் சிட்டியில் விபத்து.. படப்பிடிப்பின் போது கீழே விழுந்து தொழிலாளி பரிதாப பலி !