Tamilnadu
"தமிழ்நாடு எப்போதும் தமிழ்நாடுதான்" - 'BIGG BOSS' நிகழ்ச்சியில் சம்பவம் செய்த போட்டியாளர்கள் !
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் விக்ரமன் தமிழ்நாடு குறித்தும், தமிழ்நாடு என்ற பெயருக்கு போராடிய சங்கரலிங்கனாரின் தியாகம் குறித்தும், தமிழ்நாடு என்று அறிஞர் அண்ணா பெயர் சூட்டியது குறித்தும் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் நிகழ்வு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசுகையில், தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் எனவும், 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
அவரின் இந்த கருத்து தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் என பலதரப்பில் இருந்து ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ட்விட்டரில் 'தமிழ்நாடு' என்ற ஹஸ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
அதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் தமிழ்நாடு, திராவிட மாடல், தலைவர்களின் பெயர்கள் ஆகியவற்றை உச்சரிக்க மறுத்த ஆளுனரை கண்டித்தும் அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதன் போது ஆளுநர் பாதியில் வெளிநடப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது அதன் பின்னர் #GetOutRavi என்ற ஹஸ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமன் தமிழ்நாடு குறித்தும், தமிழ்நாடு என்ற பெயருக்கு போராடிய சங்கரலிங்கனாரின்
தியாகம் குறித்தும், தமிழ்நாடு என்று அறிஞர் அண்ணா பெயர் சூட்டியது குறித்தும் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வெளியே நடக்கும் சம்பவங்கள் தெரியாது என்று கூறப்படும் நிலையில், பல லட்சம் பொதுமக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் போட்டியாளர் இப்படி பேசுவதை குறிப்பிட்டு "இதை தெரிஞ்சு சொல்றீங்களா தெரியாம சொல்றீங்களா னு தெரியலையே" என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் அவர் 'தமிழ்நாடு எப்போதும் தமிழ்நாடு தான்" என்று அவர் கூறியதையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read
-
”இது முட்டாள்தனம்” : ஹரியானா வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற பிரேசில் மாடல் Reaction!
-
நலம் காக்கும் ஸ்டாலின்: அரசு நடத்தும் 10 சிறப்பு போட்டிகள்.. எப்போது? யார் யார் பங்கேற்கலாம்? - விவரம்!
-
KGF நடிகர் திடீர் மரணம் : சக நடிகர்கள் இரங்கல்!
-
”உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டே பதவி உயர்வு” : பதிவுத்துறை விளக்கம்!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பைக் : உயிர்தப்பிய நண்பர்கள் - நடந்தது என்ன?