Tamilnadu
10 நாளில் திருமணம்.. அழைப்பிதழ் கொடுக்க சென்ற வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்: சோகத்தில் உறவினர்கள்!
ராமநாதபுரம் மாவட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு ஜனவரி 23ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் அலெக்சாண்டர் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்குக் கொடுப்பதற்காக நாயினார் கோவில் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
பின்னர், அழைப்பிதழைக் கொடுத்து விட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அண்டக்குடி சந்திப்பு அருகே வந்த போது எதிரே வந்த கனரக வாகனத்தில் அலெக்சாண்டரின் இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
இதில் பலத்த காயம் அடைந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அலெக்சாண்டர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10 நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் வாலிபர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !