Tamilnadu
விலை உயர்ந்த செல்போனுடன் காவல்நிலையம் வந்த 3 சிறுவர்கள்.. போலிஸாரை ஆச்சரியப்பட வைத்த சம்பவம்!
செல்போன்கள் மீது சிறுவர்களுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். நமக்கு என்று தனியாக ஒரு செல்போன் இருந்தால் நன்றாக இருக்கும் என அனைத்து சிறுவர்களுமே நினைப்பது உண்டு. ஆனால் ஒருசில சிறுவர்கள் மட்டுமே தனியாக செல்போன் வைத்துள்ளனர்.பலர் தங்களது பெற்றோர்களின் செல்போனையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சாலையில் கிடந்த விலை உயர்ந்த செல்போனை அப்படியே எடுத்துச் செல்லாமல் அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் முகமது பயஸ், ராபில், ஷாகித். இவர்கள் மூன்று பேரும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் பள்ளி முடித்து விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது குளச்சல் அடுத்த உடையார்வினை பகுதியில் உள்ள சாலையில் விலை உயர்ந்த செல்போன் இருந்ததைப் பார்த்துள்ளனர். பிறகு அதை எடுத்த அவர்கள் அருகே இருந்த காவல்நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
பின்னர் அங்குக் காவல் ஆய்வாளர் கிறிஸ்டியனிடம் செல்போனை ஒப்படைத்து, 'சார் சாலையில் செல்போன் கிடந்தது. இதை சரியான உரிமையாளரிடம் ஒப்படைத்துவிடுங்க' என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
சிறுவர்களின் இந்த நல்ல குணத்தைப் பார்த்த காவல் ஆய்வாளர் கிறிஸ்டியன் அவர்களிடம் கை குலுக்கி பாராட்டி வழி அனுப்பிவைத்தார். மேலும் அப்பகுதி மக்களும் சிறுவர்களை நேர்மையைக் கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !