Tamilnadu
2 லாரிகளுக்கு இடையே அப்பளம் போல் நொறுங்கிய கார்.. கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே நின்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த லாரி ஒன்று வேகமாக மோதியது. இதனால் கார் முன்னாள் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேல் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சாலையில் லாரி ஒன்றும் அதற்குப் பின்னால் கார் ஒன்றும் நின்று கொண்டிருக்கிறது. அப்போது வேகமாக பின்னால் வந்த லாரி கார் மீது மோதியதில் முன்னாள் இருந்த லாரி மீது மோதி அப்பளம்போல் நொறுங்கும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தது சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன், அவர் மனைவி வட்சலா, விஜயரங்கன் தாயர் வசந்த லஷ்மி, மகன்கள் அதீர்த், விஷ்ணு ஆகியோர் என்பது போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“உலகம் உங்கள் கையில்” : மாணவர்களுக்கு டிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
உலகம் உங்கள் கையில் : மாணவர்களுக்காக 40 அரங்குகளுடன் தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கம்.. எங்கு? - விவரம்!
-
விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பயன்பாடு தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
சாத்தான் வேதம் ஓதும் அமித்ஷா; ஊழலைப் பற்றி என்ன அருகதை இருக்கிறது? : செல்வப்பெருந்தகை கண்டனம்!
-
ஐ.நா. பெண்கள் அமைப்புக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்... விவரம் என்ன?