Tamilnadu

நேபாளத்தில் விளையாட சென்ற இடத்தில் திடீரென உயிரிழந்த தமிழக வீரர்.. அமைச்சர் உருக்கமாக அஞ்சலி!

திருவள்ளூர் அடுத்த, கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நேருதாசன் மகன் ஆகாஷ், 27; வாலிபால் வீரர். கடந்த 21தேதி அன்று, நேபாளத்தின் போக்ரா நகரில், ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடந்த வாலிபால் போட்டியில் பங்கேற்க சென்றார்.

சம்பவத்தன்று 11:00 மணிக்கு, முதல் சுற்றில் விளையாடிய பின்னர் ஓய்வு எடுக்க அறைக்கு சென்றார். அங்கு வாந்தி எடுத்ததோடு நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது உடனடியாக சக விளையாட்டு வீரர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர், ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து உடற்கூறைய்வு மேற்கொள்ளப்பட்டு நேபாளத்தில் இருந்தது. டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஏர்இந்தியா விமானம் மூலம் உடல் கொண்டுவரப்பட்டது.

விமான நிலையத்தில் செஞ்சி கே.எஸ். மஸ்தான் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும் வி.ஜி.ராஜேந்திரன் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து அமைச்சர் பேசுகையில், “தமிழகத்தைச் சார்ந்த வாலிபால் விளையாட்டு வீரரான ஆகாஷ் நேபாளத்திற்கு விளையாட சென்ற பொழுது உயிரிழந்ததை அறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் உடற்கூறாய்வு முடிந்து இன்று சென்னை கொண்டுவரப்பட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

விளையாட்டு வீரரின் உயிரிழப்பு குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் குடும்பத்தினருக்கு உதவிகள் எதுவும் தேவை இருப்பின் பெற்று தர முயற்சிகள் மேற்கொள்வேன்” எனவும் தெரிவித்தார்.

Also Read: பிரைடு ரைஸூக்கு கூடுதலாக சால்னா கேட்டு ஓட்டலை சூறையாடிய இளைஞர்கள்.. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!