Tamilnadu
2.19 கோடி குடும்பங்களுக்கு நற்செய்தி.. ரூ.1000 பொங்கல் பரிசு அறிவித்த CM: ரேஷன் கடையில் பெறுவது எப்படி?
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் மகிழ்ச்சியாகப் பொங்கல் கொண்டாடும் வகையில் பரிசுத் தொகை மற்றும் சிறப்புத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட,அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு 2.1.2023 அன்று சென்னையில் நடைபெறும். அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைக்க உள்ளனர்.
Also Read
-
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் சோரான் மம்தானி - புறக்கணிக்க முடியாத வெற்றி!
-
“அதிமுகவிற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாததால் S.I.R - ஐ ஆதரிக்கிறார்கள்!” : என்.ஆர்.இளங்கோ கண்டனம்!
-
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
திருக்கோயில் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு; ராசிபுரத்தில் டைடல் பூங்காவுக்கு அடிக்கல்: சாதனை படைத்த தமிழ்நாடு!