தமிழ்நாடு

''சேலம் எஃகு ஆலையை தனியாருக்கு விற்கக் கூடாது''.. நாடாளுமன்றத்தில் தி.மு.க MP டி.ஆர்.பாலு ஆவேசம்!

சேலம் எஃகு ஆலையை தனியாருக்கு விற்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க வலியுறுத்தியது.

''சேலம் எஃகு ஆலையை தனியாருக்கு விற்கக் கூடாது''.. நாடாளுமன்றத்தில் தி.மு.க MP டி.ஆர்.பாலு ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இக்கூட்டத்தொடரில் 16 மசோதாக்களைத் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று மக்களவை கூடியதும், சேலம் எஃகு ஆலை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

அப்போது டி.ஆர்.பாலு பேசும்போது, தமிழ்நாட்டு மக்களும், தொழிலாளர்களும் தனியார் மயமாக்கலைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். தமிழ்நாடு அரசைக் கலந்தாலோசித்த பின்னர்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும்.

''சேலம் எஃகு ஆலையை தனியாருக்கு விற்கக் கூடாது''.. நாடாளுமன்றத்தில் தி.மு.க MP டி.ஆர்.பாலு ஆவேசம்!

தமிழ்நாடு அரசால் 3 ஆயிரத்து 373 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதில், ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதனைத் தனியார் வசம் ஒப்படைக்க அனுமதிக்க இயலாது. எனவே இந்த பிரச்சனையில் விவாதம் நடத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.

ஆனால்,சேலம் எஃகு ஆலை தனியார் மயமாக்கல் குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு தி.மு.க சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதேபோல், சீன ராணுவம் ஊடுருவல் தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும் என டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால், விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

''சேலம் எஃகு ஆலையை தனியாருக்கு விற்கக் கூடாது''.. நாடாளுமன்றத்தில் தி.மு.க MP டி.ஆர்.பாலு ஆவேசம்!

இதனைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். இதனால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோதும், இதேகோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பியதால், பிற்பகல் 2 மணிவரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு மீண்டும் 2 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியதால் 4 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories