Tamilnadu

5 மாத பெண் குழந்தை விற்க முயற்சி.. 3 பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்து போலிஸ் தீவிர விசாரணை!

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 மாத பெண் குழந்தை ஒன்று சட்டவிரோதமாக விற்பனை செய்ய உள்ளதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலிஸார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாளையங்கோட்டை மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு கோவிலின் முன்பு 5 மாத கைக்குழந்தையுடன் சிலர் நின்றுகொண்டிருந்தனர்.

இவர் மீது சந்தேகம் அடைந்த போலிஸார் விசாரணை நடத்தியதில், தூத்துக்குடியைச் சேர்ந்த மாரியப்பன், குழந்தையின் தாயான மாரீஸ்வரி, இவரது தாய் அய்யம்மாள் மற்றும் திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த சூரம்மா ஆகியோர் என்பது தெரிந்தது.

மேலும் இவர்கள் பணத்திற்காகக் குழந்தையைச் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கா அங்குக் காத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரகளை கைது செய்து, யாருக்குக் இவர்கள் குழந்தை விற்பனை செய்ய வந்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அவர்களிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில் போலிஸார் ஒப்படைத்துள்ளனர். பணத்திற்காக 5 மாத பெண் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "விராட் கோலியோடு ஒப்பீடா ? அவர் ஹீரோ இல்லை ஜீரோதான்" -சக நாட்டு வீரரையே விமர்சித்த பாக். முன்னாள் வீரர் !